அனைத்துலக நீதிமன்ற குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப் போராட்டம் நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
20151104_213855 20151104_213939
இடம்:  நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக
காலம்: வியாழக்கிழமை  05.11.2015
நேரம்: மாலை 18:00 -19:00 மணி வரை
தமிழ் மக்களுக்கு 67 ஆண்டுகளாக இழைக்கப்பட்ட பேரவலங்களுக்கு அனைத்துலக நீதிமன்ற குற்றவியல் விசாரணையே நீதியை பெற்றுத்தரும்.
இந்த விசாரணையை உள்ளகப் பொறிமுறை மூலம் செய்ய முடியாது எனவும் தீர்க்கமாக ஐக்கிய நாடுகளின் அவையின் மனித உரிமைகளுக அறிக்கை பதிவு செய்துள்ளது. இது தான் இந்த அறிக்கையின் மூலம் பெறப்படும் பிரதான பலாபலன். ஆகவே தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தில் இவ்வறிக்கை ஒரு முக்கியமான வகிபாத்திரத்தை கொண்டிருக்கும் என நம்பலாம்.
தமிழ் மக்கள் இது தொடர்பில் விழிப்பாக இருப்பது முக்கியம். வெளி வந்துள்ள அறிக்கையை பயனற்றதாக்க எடுக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டுமென்றால் நாம் தொடர்ந்து போராட வெண்டும்.
ஒழுங்கமைப்பு:
நோர்வே ஈழத்தமிழர் அவை