கட்டுமுறிவு கிராமத்திற்கான வெள்ள நிவாரண உதவியினை நோர்வே தமிழர் அமைப்பின் நிதியுதவியின்கீழ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வழங்கியுள்ளது November 26, 2015 News இன்று (25.11.2015) வாகரைப்பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கட்டுமுறிவு எனும் மற்றுமொரு கிராம மக்களுக்கான வெள்ள நிவாரண உதவியினை நோர்வே தமிழர் அமைப்பின் நிதியுதவியின்கீழ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வழங்கியுள்ளது. வெள்ள அனர்த்தத்தினால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட இம்மக்கள் தமது ஜீவனோபாய தொழிலான மீன்பிடியினை தொடர்ந்து செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் தமது அன்றாட தேவையினை பூர்த்திசெய்யமுடியாத நிலையில் காணப்டுகின்றனர் . இதுவரையில் எந்தவொரு நிறுவனமோஇ அரசியல்வாதிகளோ தமக்கு உலர் உணவினை வழங்கவில்லை எனக்கூறிய இம்மக்கள் மிகவும் ஆனந்தத்துடன் எமது உதவியினை பெற்றுக்கொண்டனர். 148 குடும்பங்களைக்கொண்ட இக்கிராமம் அடிப்படை வசதிகள் எதுவுமற்று காணப்படுகின்றன. இக்குடும்பங்கள் அனைத்துக்குமான நிவாரண உதவிகள் கிராம அலுவலர் முன்னிலையில் வழங்கப்பட்டது. கோதுமை மா – 4மபஇ அரிசி – 3மபஇ சீனி – 2மபஇ பருப்பு – 1மப மோர்டீன் -1 பெட்டிஇ பனடோல் – 20 மேற்படி பொருட்கள் ஒரு பொதியில் உள்ளக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம்- சுரேஷ் இகட்சியின் மாவட்ட செயலாளர்இசமயலிங்கம்-அண்ணாத்துரை மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு பொருட்களை வழங்கிவைத்தனர்.