நோர்வேயில் நடைபெற்ற மாவீரர்நாள் எழுச்சி நிகழ்வு November 28, 2015 News, TCC 27.11.2014 ஒஸ்லோவில் அமைந்துள்ள கிருஸ்ண சென்ரர் மண்டபத்தில் மதியம் 12;:45 மணிக்கு மிக சிறப்பாக ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் மூவாயிரத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் . முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மாவீரர்களின் உதிரத்தால் உருவாகிய தேசியக்கொடீ ஏற்றப்பட்டது.அதனை தொடர்ந்து தேசியத்தலைவரின் 2008ஆம் ஆண்டு மாவீரர்நாள் உரையிலிருந்து ஒரு பகுதியும் அனைத்துலகத்தின் மாவீரர்நாள் அறிக்கையும் தொடர்ந்து உலகத்தில் எந்த மூலையில் வாழந்தாலும் தமிழீழத்தின் விடுதலைக்காக உறுதியோடு உழைப்போமென உறுதிமொழி மக்களோடு சேர்ந்து எடுக்கப்பட்டதை தொடர்ந்து மணி ஒலி மூன்று தடவைகள் ஒலித்ததை தொடர்ந்து வித்தாகி வீழ்ந்த வீரர்களுக்காகவும் இன அழிப்பு செய்யப்பட்ட மக்களுக்காகவும் அகவணக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரக்கடவுள்களை போற்றி வணங்கும் துயிலும் இல்லப்பாடல் வெண்திரையில் தாயக நினைவுகளை மீட்டியபோது மக்களின் விழிகளில் நீர் முட்டியது. எப்படித்தான் இதயத்தை இறுக்கிப்பிடித்தாலும் கசியும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற அளவிற்கு உணர்வுகள் மண்ணின் வீரர்களை தேடியது. மாவீரக்கடவுள்களை மக்கள் மனசார பூசிக்கும் பாடலை தொடர்ந்து மாவீரர் குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர் மககள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியவேளையில் நோர்வே தமிழர் கலை பண்பாட்டுக் கழக இசைக்குழுவின் மாவீரர்கானம் மண்டபத்தில் மேலும் உணர்வுகளை ஊட்டியது. இவற்றோடு இளையோர் அமைப்பினரின் தமிழ்உரையும் நோர்வேஜிய மொழியில் உரையும் இடம்பெற்றது அவ்வுரைகளில் அவர்கள குறிப்பிடுகின்ற போது தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை தாங்கிச்செல்கின்ற சக்தியை தலைவர் அவர்கள் எம்மிடம் கொடுத்திருக்கின்றார் ஆகவே தமிழர் என்ற ஒற்றை சொல்லில் இளையவர்களாகிய நாம் ஒன்றாகி விடுதலைக்காக உழைக்க கரம்கோர்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர் இவற்றை தொடர்ந்து சுவீடனில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த பேராசிரியர் பீற்றர் சாக் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது சிறப்புரையில் அவர் தெரிவிக்கையில் தமிழ்மக்களின் நிரந்தரத்தீர்வுக்கு தமிழீழமே சாத்தியம் அதற்காவே மாவீரர்கள் தியாகம் செய்தார்கள் அதற்காகவே போராடவேண்டும் என்பதோடு தமிழ்மக்கள் மீது திட்டமிட்ட பண்பாட்டு இனவழிப்பிலிருந்து உயிர் இன அழிப்புவரை சிறீலங்கா நிகழ்த்தியிருக்கின்றது என்பதையும் வலியுறுத்தியுள்ளார். சிறப்புரையை தொடர்ந்து நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர் முரளி சிவானந்தன் அவர்களின் உரை இடம்பெற்றது.அவர் தனது உரையில் தெரிவிக்கையில் தேங்கிய குட்டைபோல் எமது போராட்டத்தின் செயற்பாடுகள் முடங்கிப்போகாது மாவீரர்களின் இலக்கு நோக்கி நகர்வதற்கு ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை ஆரோக்கியமான முறையில் முன்னெடுத்துச்செல்ல அனைவரும் முன்வரவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மற்றும் அன்னைபூபதி பாடசாலைகளால் நடாத்தப்பட்ட மாவீரர்நாள் ஒவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. மாவீரர்நாளில் கலைநிகழ்வுகளாக நடனங்கள் நாடகம் என்பன வரலாற்றை புரட்டிப்பார்ததோடு தமிழரின் விடுதலை தாகத்திற்கு பலமான கலைவெளிப்பாடக அமைந்தது. இறுதியாக எமது இலட்சியத்தில் உறுதிகொள்ள வைக்கும் பாடலான நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கை வரிகளோடு தேசியக்கொடி இறக்கப்பட்டு நிகழ்வு நிறைவு கண்டது. காத்து வீழ்ந்தவர் காலடி போற்றும் நாளினை சிறப்பாக நடாத்த உதவிய அனைத்து மக்களையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கரம்பற்றிக்கொள்கின்ற அதேவேளை விடுதலையை வென்றெடுக்க சத்தியம் செய்துகொள்கின்றது.