தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்ட எங்களின் தத்துவஞானி,  ராஜபறவை, எல்லோரினதும் மதிப்பிற்குரிய மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்அவர்கள்,  2006ம் ஆண்டு மார்கழி மாதம் 14ம் திகதி, ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து, தமிழீழத்தின் தேசத்தின்குரலாக, தமிழீழ விடியலில் வரலாறானார்.

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழமக்களின் விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது. தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலை வீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார்.

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 9ம்ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு திங்கட்கிழமை,14.12.2015  மாலை 18:30 மணிக்கு தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடைபெறுகிறது.

இந் நினைவேந்தல் நிகழ்வில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

–  ஒழுங்குகள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு