காசி அண்ணன் உதவிகள் வழங்கியபோது ஆற்றிய உரை


சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கொட்டித் தீர்த்த பெருமழையும், அதனால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளமும், ஏராளமானோரின் இதயங்களில் புதைந்திருந்த மனிதநேயத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுகின்ற விடயத்தில், உலகத்தில் உள்ள மற்ற இனத்தவர்களை விடவும் தமிழீழ தமிழர்களுக்கே கூடுதல் பொறுப்பும் கடப்பாடும் உள்ளது. தொப்புள் கொடி உறவைத் தமிழகத்துடன் கொண்டுள்ளவர்கள் இங்குள்ள தமிழர்கள்.

தமிழரின் போராட்டங்களுக்குத் துணை நின்றது, அடைக்கலம் கொடுத்தது என்று பல்வேறு வழிகளில் ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுக்குக் கடமைப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இன்று அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்கள் (புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள்) சார்பாக சென்னை மீனம்பாக்கம் குளத்து மேடு பகுதியில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்று வரை எந்தவித வாழ்வாதார உதவிகளும் இல்லாது தத்தளித்த மக்களுக்கு இன்று இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையமூடாக கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் அதன் செயலர் மூர்த்தி அவர்களும், மாணவர்களும்,இளையோர்களும் இணைந்து மீன்பாக்கம் குளத்துமேடு என்னும் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர். தொடர்ந்து 18.12.2015 வெள்ளிக்கிழமை சென்னை ஆவடி அருகில் திருமுல்லை வாயிலில் எட்டியம்மன் என்னும் பகுதியில் காலை 11.00 மணியளவில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.