தமிழக மக்களுக்கான வெள்ள நிவாரண உதவிகள். (புதிய படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

தமிழகத்தின் பல மாவட்டங்களை உருக்குலைத்துப் போட்டிருக்கும் கனமழைஇ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை சென்னையில் அனைத்துலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்கள் (புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள்) சார்பில் இந்திய ஈழத் தமிழர் நட்புறவும் மையம் வழங்கி வருகிறது.

அந்த வைகையில் இன்று (18-12-2015) காலை சென்னை ஆவடி, நகராச்சி உயர்நிலைப் பள்ளி பின்புறம் எண் -1 வெங்கடேஸ்வர தெரு,எட்டி அம்மன் நகர், திருமுல்லை வாயில் என்னும் முகவரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் அதன் செயலர் மூர்த்தி அவர்களும், மாணவர்களும்,இளையோர்களும் இணைந்து நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.

உலகின் எந்த மூலையில் வாழந்தாலும் ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டு மக்கள் மீது கொண்டுள்ள தொப்புள் கொடி உறவை – இன உணர்வுத் துடிப்பை எடுத்துக்காட்டுவதாய் இன் நிகழ்வு அமைந்தது.

அடுத்து காடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
VDO_1
VDO_2
VDO_3
VDO_4