வெள்ள நிவாரணம் கட்டம் – 3 (சென்னை, பல்லாவரம் பொழிச்சலூர்)


தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அனைத்துலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்கள் உதவி

தமிழகத்தின் பல மாவட்டங்களை உருக்குலைத்துப் போட்டிருக்கும் பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை சென்னையில் அனைத்துலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்கள் (புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள்) சார்பில் இந்திய ஈழத் தமிழர் நட்புறவும் மையம் வழங்கி வருகிறது.

இலங்கை அரசின் அடக்கமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் அஞ்சி தங்களது உறவுகளையும், உடமைகளையும் இழந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகதிகளாக தமிழீழ மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று சென்னை, பல்லாவரம் பொழிச்சலூர் எனும் இடத்தில் வசித்து வரும் குடும்பங்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் 90 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அனைத்துலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்கள் (புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள்) சார்பில் இந்திய ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் அதன் செயலாளர் மூர்த்தி அவர்களும், தேவர் அவர்களும் மற்றும் இளையோர்களும் இணைந்து வழங்கியுள்ளனர்