இது ஒரு அழகிய தமிழ்க் கரையோரப் பட்டினம்.

VThivu2

விடத்தலல்தீவு, மன்னார்-யாழ் ஏ-32 நெடுஞ்சாலையிற்கு மேற்கே உள்ள அழகிய, வழமான, சிறிய மீன்பிடித்துறை கொண்ட தமிழ்க் குடியிருப்பாகும். இப்பிரதேசத்தில் காலனித்துவத்திற்கு முற்பட்ட மாந்தைத்துறைமுக நகர் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்ட காலத்தில் இருந்தே மக்கள் குடியிருப்பைக்கொண்ட கடல் வளத்தால் வளர்ந்த இடமாகும்.

SAMSUNG

16 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில் மன்னார் பெருநிலப்பரப்பில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இம்மக்கள் மன்னார தீவில், மன்னார்-தலைமன்னார் பாதையோரமாக உள்ள தோட்டவெளிப்பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர். தரைவழிப்பாதைகள் தடைப்பட்ட நிலையில் படகுகள் மூலம் பள்ளிமுனைத்துறையை வந்தடைந்திருந்தனர். இவர்களை மன்னார் மாவட்ட பாதிரியார் திரு ஜோசப் இராயப்பு அவர்களின் உதவியுடன் இவர்கள் குடியமர்த்தப்பட்டிருந்தனர். மீன்பிடியை வாழ்வாதாரமாகக்கொண்ட இம்மக்கள் கோந்தைப்பிட்டி படகுத்துறையை 2001 இல் இருந்துபாவித்து வந்தனர். உப்புக்குளப்பகுதியில் இருந்து 1990 இல் முஸ்லிம்மக்கள் வெளியேற்றப்பட்டதற்கு முன்னர் கோந்தைப்பிட்டி தமிழ்ப்பேசும் முஸ்லிம் மக்களால் பாவனைக் குட்படுத்தப்பட்டிருந்தது.

SAMSUNG

சமாதனக்காலத்திலும் அதன் பின்னரும் மீள்குடியேற்றத்திற்குட்படுத்தப்பட்ட முஸ்லிம்மக்கள் கோந்தைப்பிட்டி படகுத்துறையைக்கான உரிமையைக்கேட்ட போது முரன்பாடுகள் ஏற்பட்டன. இப்பிரச்சனையை சூமூகமாக தீர்க்க பொது மக்கள் அமைப்புக்கள் முயற்சி எடுத்திருந்தனர். முஸ்லிம் காங்கிரஸ் மூலம் வென்று பின்னர் ஆளுங்கட்சிக்கு தாவிய கபினட் அமைச்சர் திரு. ரிசாத் பதுதியின் இப்பிரச்சனையை தமழ்-முஸ்லிம் பிரச்சனையாக்க பாவிக்கின்றார்.

தமிழ் மக்கள் 90 வீதமான சொந்த விடுத்தல் தீவையும் கடற்கரையையும் இழந்து, தற்காலிக கோந்தைப்பிட்டி படகுத்துறையையும் இழந்து எஞ்சிய
10 வீதமான விடுத்தல் தீவு கடற்கரையையும் இழக்கும் தறுவாயில் உள்ளனர்.
ஏற்கனவே 90 வீதமான கடற்கரையை ஆக்கிரமித்துள்ளு சிறிலங்கா கடல் படை மீதி 10 வீதத்தையும் விட்டுவைக்க விரும்பவில்லை. விடத்தல் தீவு தென்னிந்திய பிரதேசத்தை கண்காணிப்பில் வைத்திருக்கவும் பாக்கு நீரிணையை நோட்டமிடவும் வசதியான கேந்தில நிலையில் உள்ளது.

SAMSUNG

விடுத்தல் தீவு சிங்களத்தின் முழுவசதிகொண்ட கடல்படை முகாமா மாற்றம் கொண்டு வருகின்றது. இங்கோ அன்றி எந்த கேந்திரமுக்கியத்துவமான இடங்களிலோ தமிழர்கள் இருப்பதை சிங்களம் விரும்பவில்லை.
எதிர்கட்சிப்பதவியையும், வடமாகாண சபையையும் வைத்திருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இவ்வாக்கிரமிப்புக்களை எதிர்க்கும் பலமற்றவர்களாக உள்ளனர்.
சொந்த இடத்தில் குடியேற அனுமதி மறுக்கப்பட்ட மக்கள் கூட்டுப்படை முகாமாக உள்ள தள்ளாடி முகாமிற்கருகில் குடியேற அழுத்தம் குடுக்கப்பட்டிருந்தனர். சிறு பகுதி தமிழர் தள்ளாடிப்பகுதிக்கு சென்ற போது சிங்கள இராணுவத்தினரால் விரட்டப்பட்டுள்ளனர்.

விடத்தல்தீவு மக்ளுக்கு சொந்த இடத்தில் குடியேறுவது முயற்கொம்பாகவே உள்ளது.

SAMSUNG

SAMSUNG

தமிழ்நெற் செய்தியை மூலமாகக்கொண்டு எழுதப்பட்டது.