HomeDiasporaபாராட்டப்பட வேண்டிய தமிழ் இளையோர்! December 29, 2015 Diaspora, TCC, Uncategorized நோர்வே- பெரிய கடைகளில் வருட இறுதியில் களஞ்சியக் கணக்கெடுப்பு செய்வது வழமை. கணக்கெடுப்பு குறித்த ஒரு நாளில் வேகமாக செய்து முடிக்கவேண்டும். பொதுவாக விளையாட்டு கழகங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களும் இவ்வேலைகளைச்செய்து தமது செயல்திட்டங்களுக்கு நிதி சேர்ப்பது இங்கு வழமையான ஒன்று. நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் வருடா வருடம் இவ்வாறான வேலைத்திட்டங்களில் சிரமதானம் மூலம் வேலைசெய்து, வரும் நிதியை எம் தாய்நாட்டின் விடுதலைக்கும் எம்மக்களின் மேம்பாட்டிற்கும் உபயோகிப்பதும் வழமையானது. இம்முறை இவ்வேலைத்திட்டத்தில் அதிகளவில் இளையோர் பங்கு பற்றி மிகவும் உற்சாகத்துடன், ஒரு நல்ல வேலை செய்கின்றோம் என்ற பெருமையுடன் தொண்டாற்றியது எம்மினம் சார்ந்து புதிய நம்பிக்கையை அளிக்கின்றது.. 27.12.15 அன்று காலை 10:00 மணியில் இருந்து பி.பகல் 14:00 மணிவைரை 32 தொண்டர்கள் வேலைசெய்து அண்ணளவாக 30 000 நோர்வேஜிய குரோனர்களை உழைததுள்ளனர். இவ்விளையோருக்கு த.ஒ.கு தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றது.