இந்தியாவை புறந்தள்ளி 8 பாகிஸ்தானிய யுத்த விமானங்களை சிறிலங்கா கொள்வனவு செய்யவுள்ளது. January 7, 2016 News இந்தியாவை புறந்தள்ளி 8 பாகிஸ்தானிய யுத்த விமானங்களை சிறிலங்க கொள்வனவு செய்யவுள்ளது. பாகிஸ்தானிய பிரதமந்திரி நவாஸ் சரிப் சிறிலங்காவிற்கான விஜயத்தின் போது பல ஒப்பந்தங்கள் சிறிலங்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கைச்சாத்திடப்படன. அவற்றுள் ஒன்றாக 8 துகு-17 ரக யுத்த விமானக் கொள்வனவும் அடங்குகின்றன.JF-17 பாகிஸ்தான்-சீன கூட்டுதயாரிப்பாகும். சிறிலங்காவின் நம்பகமான நண்பன் என்ற கருத்தப்படி சிறிலங்காவின் ஜனாதிபதியும் சந்திப்பின்போது பாகிஸ்தானைப் புகழந்துள்ளார். பதிலுக்கு பாகிஸ்தானும் இராணுவ உறவுகளை மேலும் வளர்த்துக்கொள்க ஆர்வம் காட்டியுள்ளது. பாகிஸ்தானிய கடல்படைக்கப்பல்கள் சிறிலங்கா துறைமுகங்களுக்கு அடிக்கடி விஜயம் செய்ய பாகிஸ்தானும் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவும இக்கொள்வனவைத்தடுக்கு தானும் தனது அதிநவீன விமானங்களை சிறிலங்காவிற்கு விற்க முன்வந்துள்ளது என http://thediplomat.com செய்தி வெளியிட்டுள்ளது.