உள்ளுர் தீர்வுகள் ஒருபோதும் சாத்தியம் இல்லை – சிவாஜிலிங்கம்

உள்ளுர் தீர்வுகள் ஒருபோதும் சாத்தியம் இல்லை – சிவாஜிலிங்கம்

இறுதியுத்தத்தில் காணாமல் போன 20 000 பேரில் 8 000 பேர் இராணுவத்திடம் சரணடைந்தபதிவுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் பெண்கள் குழைந்தைகள் அடங்கிய ஆயுதம் தரிக்காத அப்பாவிகள். 200 வரையிலான அரசியல் கைதிகள் விசாரணை இன்றி பலவருடங்களாக தம்விடுதலைக்காக போராடிவருகின்றனர்.
ஒரே ஒரு அரசியல்கைதி விடுவித்துவிட்டு உலகையும் ஈழத்தையும் ஏமாற்றிவருகின்ற சிறிசேன-ரணில் கூட்டு ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியும் தமிழருக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை எனக்கோசமிட்டு இன்று கறுப்புக்கொடி போராட்டம் இடம்பெற்றது. வலிகாமத்தில் சில பகுதிகளை விடுவிப்பதாக படம் காட்டிக்கொண்டு வன்னியிலும் மட்டக்களப்பிலும் பல நுற்றுக்கணக்கான ஏக்கர் தமிழர் நிலங்களை சிறிலங்கா படைகள் சுவீகரித்து வருகின்றது.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சிவாஜிலிங்கம், கஜேந்திரன் , அனந்தி ஆகியோரின் ஒளித்தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளன.