கேணல் கிட்டு உட்பட பத்து வீர வேங்கைகளின் 23 ஆவது வீர வணக்க நிகழ்வு

கேணல் கிட்டு உட்பட பத்து வீர வேங்கைகளின் 23 ஆவது வீர வணக்க நிகழ்வு நேற்று மாலை (16.01.2016) தமிழர் வள ஆலோசனை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பொதுச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கம், ஆகியவற்றைத் தொடர்ந்து தாயக விடுதலைப்பாடல்கள், கிட்டண்ணா நினைவுசுமந்த பாடல்கள், நினைவுரை, கவிஞர் சோதியாவின் கிட்டண்ணா நினைவுசுமந்த கவிதை, விபரணம் என்பன நிகழ்வுகளாக இடம் பெற்றன.

இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.