சம்பூர் கடல் படை முகாமிற்கருகில் ஆறு வயதுப்பாலகன் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை.

திங்கள் மாலை 5.30 இல் இருந்து தேடப்பட்டு வந்த 6 வயது பாலகன் விதுர சிங்கள இனப்படுகொலை படை முகாமிற்கருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு. இச்சிறுவனைத்தேடிய மீள்குடியேறிய மக்கள் கடல் படைமுகாமிற்கண்மையில் உள்ள ஒருவீட்டில் பாலியில் துஸ்பிரயோகம் செய்ய தடயங்களை அவதானித்துள்ளனர். பொலிசார் உடலை எடுக்கும்போது சிறுவனின் உடல் சிங்கள சிப்பாய்களின் சப்பாத்து நாடாவினால் கட்டப்பட்டிருந்ததை மக்கள் அவதானித்துள்ளனர்.
இக்கொலைக்கு மக்கள் வாழ் இடங்களில் இருந்து படைகளை விலத்தத்தவறிய சிறிலங்கா ஜனாதிபதி சிறிசேனவே நேரடிப்பொறுப்பு என திருகோணமலையில் இருந்து செயல்படும் தமிழ் மனித உரிமைசசெயல்பாட்டினர் குற்றம் சாட்டியுள்ளனர். 2009 இற்கு பின்னர் சிங்கள இனப்படுகொலை அரசிற்கு முண்டுகொடுத்து வரும் மேற்கத்திய நாடுகளும் தொடரும் இனப்படுகொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

இக்கொடூரக்கொலையும் வன்புணர்வும் மூதுர்கிழக்கு முழுவதிலும் பயப்பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தர்சன் குகதாசன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இப்பாலகன், 5 மாதங்களுக்கு முன்னர் மீள்குடியேறிய குடும்பத்தின் மூன்றாவதும் கடைசிப்பிள்ளையும் ஆவார். இவர் 1ம் வகுப்பில் கல்வி பயின்று வந்தார்.
அண்மைக்காலங்களில்இ இச்சிறுவனுக்கு இனிப்புப்பண்டங்களைக்கொடுத்து சிங்கள படையினர் தமது முகாமிற்கு அழைத்து வந்துள்ளனர்.

சிங்கள கடல்படை சம்பூர் மகாவித்தியாலத்தையும் அதனைச்சூழ உள்ள 237 ஏக்கர் காணிகளையும் விட்டு வெளியேறுவது மீண்டும் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. விதுரா பயிற்சிமுகாமும் மாற்றப்படமலே இருக்கின்றது.. “நல்லாட்சி நாயகன”; சிறிலங்காவின் ஜனாதிபதி வாக்குறுதி காற்றில் பறந்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலரும் தந்போதய கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பர்ணாந்து சிறிலங்கா கடல்படை இவ்விடங்களை காலிசெய்யும் என டிசம்பர் 15 இல் கூறினார். ஆனால் கடல்படையினர் விலகும் சிரமனைக்காணவில்லை..

ஒற்றையாட்சி “சிறிலங்கா” திருகோணமலையை வைத்து ஏகாதிபத்திய போட்டியில் இருக்கும் அமெரிக்கா-சீனா-இந்தியா விடம் பேரம்பேசி தனது இன அழிப்பு இராணுவத்தை தமிழர் தாயகம் முழுவதிலும் பராமரித்துவருகின்றது.
தமிழர் தாயகம் எங்கும் நிலைகொண்டுள்ள சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் கலாச்சாரஇ கட்டுமானஇ கொலைகள்-கற்பளிப்பு நிறைவேற்றி ஈழத்தமிருக்கு எதிரான இனப்படுகொலையை தொடர்ச்சியாக நிகழ்த்தி வருகின்றது. மே-2009 இற்குப்பிறகு குறிப்பாக தமிழ்ப்பெண்களும் சிறார்களும் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளனர். முன்னர் சிறுவர் படைபற்றி வாய்கிழிய கத்தியயாரையும் பெண் உரிமை பேசியவர்களையும் இப்போது காணமுடிவதில்லை.

Tharshan_Kugathasan_03

Tharshan_Kugathasan_02

Champoor_818_acres