HomeTranslated Feauture“இனவழிப்பு” என்பதை ஏற்காதவரை ஒருபோதும் ஏற்காதே January 28, 2016 Translated Feauture “இனவழிப்பு” என்பதை ஏற்காதவரை ஒருபோதும் ஏற்காதே சிறிலங்கா இனப்பிரச்சனைக்கு பல பகுதிகளில் இருந்தும் அறிவுரைகளும் ஆலோசனைகளும் வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரையோ அல்லது சிறிலங்கா இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்க முனையும் நிறுவனங்களையோ தனித் தனியாக ஆராய பாதிக்கப்பட்டு நொந்து போய் உள்ள ஈழத்தமிழருக்கு வளங்களோ நேரமோ இல்லை. இப்பிரச்சனைக்கு இலகுவான பொறிமுறை ஒன்றை பலவருடங்களாக அமெரிக்கப்ப பல்கலைக்கழகத்தில் சட்டதுறை பேராசிரியராக பணிபுரியும் திரு. பொய்லி வழங்கியுள்ளார். அதாவது ஒரு இலகுவான கேள்வி மூலம் இவர்களின் நோக்கங்களை ஊகிக்கலாம். «ஈழத் தமிழருக்கு நடந்தது, நடப்பது இனப்படுகொலையா ? என்ற கேள்விக்கு வெறுமனே சடையாமல் இனப்படுகொலை எனக்கூற மறுப்போரை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார். உதாரணமாக நாசிகளின் யூத இனப்படுகொலையை ஏற்காதவர்களை யூதர்கள் ஒரு பொருட்டாகவே பார்ப்பதில்லை. இது எம்மவர்கட்கும் நல்லதொரு எடுத்துக்காட்டக இருக்கவேண்டும். இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்க வருவோர் இறுதியில் சிறிலங்காவை மீட்பவர்களாகவே உள்ளனர். அருமையான இலகுவான இப்பரிசோதனை கோட்டுப்போட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் வேட்டிகட்டியவர்களுக்கும் பொருந்தும். தமிழ் நெற்றை தழுவி எழுதப்பட்டது யூதருக்கு நடந்தது தமிழருக்கு நடந்தது