சிறிலங்காவின் சுதந்திரதினம் – ஒஸ்லோவில் எதிர்ப்பு போராட்டம்.

ஆங்கிலேய காலனித்துவ ஆட்சி ஜனநாயகம் என்ற பெயரில் சிங்கள பெரும்பான்மைக்கு வழங்கப்பட்டதை குறிக்கும் பெப்ரவரி 4. இந்த நாள் தமிழருக்கு காலனித்துவ ஆட்சியின் கைமாற்றமே அன்றி சுதந்திர நாள் அன்று. ஈழத்தமிரைப் பொறுத்தவரையில் சுதந்திர தமிழீழம் மலரும் நாளே உண்மையான சுதந்திர நாளாகும்.

இன்று மாலை நோர்வே பாராளமன்றத்திற்கு முன்னால் நோர்வே வாழ் ஈழத்தமிழ் மக்கள் தாயகமக்களுடன் உணர்வுரீதியில் இணைந்து தமதுஎதிர்ப்பைத்தெரிவித்தனர்.
இறுதியில் நோர்வே ஈழத்தமிழர் அவை சார்பில் திரு. கண்ணன் அவர்களின் உரையுடன் கண்டனப்போராட்டம் முடிவிற்கு வந்தது.