ஜேர்மன் கிளைச் செயற்பாட்டாளர் கதிரேசு சதானந்தன் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

Kathiresan

கதிரேசு சதானந்தன் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

 

தலைமைச் செயலகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

கதிரேசு சதானந்தம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு
தமிழ் மக்களினதும் தமிழீழத் தாய்நாட்டினதும் விடிவிற்காக புலம்பெயர் தேசத்தில் 1994 ஆம்
ஆண்டில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் யேர்மன் கிளையில் செயற்பாட்டாளராகத்
தன்னை இணைத்து விடுதலைக்காக உழைத்துவந்த ஒரு சிறந்த மனிதரை தமிழர் தேசம்
28.02.2016 அன்று இழந்துவிட்டது.
அமரர் கதிரேசு சதானந்தம் அவர்கள் 1994 ஆம் ஆண்டிலிருந்து யேர்மனில் சார்லாண்ட்
தமிழாலயங்கள் இணைந்து நடாத்தும் ஆண்டு விழாக்கள் அனைத்தையும் ஒளிப்பதிவு செய்து
ஆவணமாக்கி, தமிழாலய வளர்ச்சிக்காக அளப்பெரிய சேவைகளை ஆற்றினார். கடந்த 2004
ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தை அடுத்து, எமது மக்களுக்காகப் பாரிய அளவு நிதி
சேகரிப்புக்குத் தனது முழுப் பங்களிப்பையும் வழங்கினார்.
யேர்மனில் டூட்வய்லர் நகருக்கான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நகரச்
செயற்பாட்டாளராக 2003 இல் இருந்து செயற்பட்டு வந்ததோடு, 2011 தொடக்கம் 2013 வரை
யேர்மனில் சார்புறூக்கன் தமிழாலயத் துணை நிருவாகியாகப் பணியாற்றினார். நீண்ட
காலமாகப் புலம்பெயர் தேசத்தில் நடைபெறும் எழுச்சி நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள்,
கலைநிகழ்வுகளின் ஒலி, ஒளிப்பதிவு அமைப்பாளராகவும் ஆவணப்படுத்தலுக்குப்
பொறுப்பாளராகவும் பணியாற்றினார். கலைப் பண்பாட்டுக் கழகத்தினால் சார்லாண்ட்
மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த்தாய் இசைக்குழுவை உருவாக்குவதற்காகத் தனது
இல்லத்தையே இசைப் பயிற்சிக் கலையகமாக்கிப் பணியாற்றினார்.
மேலும், ஒரு தலைமைச் செயற்பாட்டாளராக, இளையோருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து
எமது தேசத்தைக் கட்டமைப்பதற்கான பல்வேறு கடமைகளைச் செய்துவந்தார். கடந்த 2009
ஆம் ஆண்டிலிருந்து, புலம்பெயர் தேசத்தில் நடைபெற்ற அனைத்து அறவழிப்
போராட்டங்களிலும் பங்கெடுத்ததோடு, நடைப்பயணம், ஈருருளிப்பயணம் ஆகிய கவனயீர்ப்புப்
போராட்டங்களில் முன்னின்று உழைத்தும் இளையோர்களை ஊக்குவித்தும் அரும்பணி
ஆற்றினார்.
இவ்வாறாக எமது மக்கள் மீதும், தமிழீழ தேசத்தின் மீதும் ஆழமான பற்றுறுதியோடு
தனது இறுதி மூச்சுவரை தன்னலமின்றி உழைத்த கதிரேசு சதானந்தம் அவர்களுக்கு எமது
விடுதலை அமைப்பு நாட்டுப்பற்றாளர் என்னும் கௌரவத்தை வழங்கி மதிப்பளிக்கின்றது.

“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

தலைமைச் செயலகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.