மனித உரிமை செயற்ப்பாட்டாளர் கஜன் அவர்கள் வருடத்திற்கு மூன்று தடவைகள் தமிழின அழிப்பினை அம்பலப்படுத்தும் ஆதாரமாக இருக்கக்கூடிய புகைப்படங்களை தொகுத்து புகைப்படக்கண்காட்சி போராட்டத்தினை செய்து வருகின்றார்.

இம்முறை 31வது மனித உரிமை கூட்டத்தோடரை மையப்படுத்தி ஜெனீவாவில் அமைந்திருக்கும் ஜநாவின் நுழைவாயிலில் தனது போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார்.

பலவெளிநாட்டவர்கள் இந்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டு செல்வதோடு புகைப்படக்கருவிகள் மூலம் பதிவு செய்து கொண்டுசெல்வதாகவும் அறியமுடிகின்றது.

அவருடை போராட்டத்தின் மூலம் உலகத்தின் மனச்சாட்சியை நிச்சயம் திறக்கமுடியும் என்றோ இதற்கான விடைகிடைக்கும் ஆகவே சோர்வை துறந்து விடுதலைக்கான பயணத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்.