2009 முள்ளிவாய்கால் வரை நடைபெற்ற ஆயுதவளியிலான தமிழின அழிப்பை வலியுறுத்தியும் 2009 இற்கு பிற்பாடு மௌனமாக நடாத்தப்படும் தமிழின அழிப்பினை வலியுறுத்தியும் தமிழ் இனத்திற்கான விடுதலைவேண்டியும் ஜநாவை நோக்கி ஈருருளிப்போராட்டம் ஜரோப்பிய பாராளுமன்றத்தில் ஆரம்பித்து தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது மனித உரிமைச்செயற்பாட்டாளர்கள் நம்பிக்கையோடு ஈருருளி கவனயீர்ப்புப்போராட்டத்தினை நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் இனத்தின் வலியை நெஞ்சில் சுமந்து மாவீரர்களின் கனவை உறுதியில் சுமந்து ஈருருளிப்பயணத்தை மேற்கொண்டுவரும் செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு கிருபா அவர்களை தொலைபேசி வாயிலாக இணைத்து ஈருளிப்போராட்டம் தொடர்பாக கேட்டறிந்தபோது நம்பிக்யையான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்