வலி வடக்கில் மக்களின் காணிகளில் இராணுவம் குடிகொண்டிருப்பது மட்டுமல்லாது தமிழ்மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பண்பாட்டுச்சிதைவுகளை ஏற்படுத்திவருகின்றார்கள் அதுமட்டுமல்லாது சிங்களக்குடியேற்றம் புத்தர்கோவில் உருவாக்கல் போன்ற சிங்களதேசியத்தை வலுப்படுத்தி தமிழ்த்தேசியத்தின் இருப்பை நலிவடையசெய்வதில் இனவாதிகள் கங்கணம் கட்டிநிற்கின்றார்கள்.

ஆயுதவழியில் தமிழ்மக்களை இன அழிப்புக்கு உள்ளாக்கிய பின்பு எஞ்சியுள்ள தமிழர்களை திட்டமிட்டு மறைமுக இன அழிப்புக்குள் இட்டு செல்வதை கண்டும் காணதவர்களாக உலகமும் இருக்கின்றது.
இந்த நிலையில் எமது சனநாயக வழியிலான போராட்டங்களை நிலத்து மக்களும் புலத்துமக்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கவேண்டும் நல்லாட்சி என்ற மாயைவலைக்குள் தமிழர்களாகிய நாங்களும் சிக்கித்தவிப்போமானால் நாங்களே எமது விடுதலைக்கு கொள்ளி வைப்பவர்களாக மாறிவிடுவோம் ஆகவே அன்பான உறவுகளே சளைக்காது போராட்டங்களை முன்னெடுங்கள் இந்த போராட்டத்தினோடுதான் எம்மை நாமே காப்பற்றிக்கொள்ளமுடியும்.