தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் விடுக்கும் அறிவித்தல்
மேதின எழுச்சிப் பேரணி

ஒஸ்லோவில் எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் மேதின எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு தமிழீழவிடுதலைக்காய் உரிமைக்குரல் கொடுப்போம் வாருங்கள்!

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தமிழ்மக்கள்மீது திட்டமிட்டு நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனப்படுகொலையையும்,

தமிழர் நிலங்களில் அத்துமீறி ஏற்படுத்தப்படும் சிங்கள குடியேற்றம், பௌத்த பரவலாக்கத்தையும்,

தமிழர்பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வன்புணர்வு, கொலை போன்றவற்றைவும் தடுத்த நிறுத்தக் கோருவோம்!

தமிம்மக்களின் அரசியல் அபிலாசைகளை அறிந்து கொள்ள தமிழர்பிரதேசத்தில் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடாத்த உதவி செய்யும் வண்ணமும் அனைத்து நோர்வேஜிய மக்களிற்கும் இப்பேரணியில் எடுத்துரைப்போம்!

 

இந்த மேதின பேரணியில் எழுச்சியுடன் அனைவரும் கலந்து கொண்டு,

எமது தாய்நாட்டில் ஸ்ரீலங்கா பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள்ளாகி அல்லலுறும் எம் உறவுகளிற்காகவும், எமது தாயக விடுதலையை வென்றெடுப்பதற்காகவும் குரல் கொடுப்போம் வாருங்கள்!

இவ் ஊர்வலத்தில் அனைத்து தமிழ் உறவுகள் அனைவரையும் கலந்து கொள்ளும் படி வேண்டி நிற்கிறோம்.


இடம்: Youngstorget 

நேரம்: 11:00 மணி
ஒருங்கிணைப்பு
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நோர்வே

1.mai 2016