இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் கைது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை விமர்சித்ததால் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் கைது.
ஆள் கடத்தலுக்கு பெயர்போன «பயங்கரவாத» விசாரணைக்குழு «புதியவன்» பத்திரிகை ஆசிரியரும் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவருமான திரு. சிவகரனை மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள பத்திரகை அலுவலகத்தில் வைத்து கைதுசெய்துள்ளது.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணை இன்றி கைதுசெய்யும் பயங்கராவாத சட்டத்தை விமர்சித்து தற்போதைய மைத்திரி-ரணில் அரசு முன்னைய மகிந்த அரசைவிட வேறுபட்டது அல்ல எனக்கூறியிருந்தார்.
இவரைக்கைது செய்ததன் மூலம் இவரின் கூற்று சரியானதே என மைத்திரி-ரணில் அரசு நிறுவியுள்ளது.