zcO0Nr042YYநோர்வேயில் நடைபெற்ற மேதினப்பேரணி May 1, 2016 News, TCC இன்று மதியம் 11:45 மணிக்கு Youngstorget இல் மேதின நிகழ்வுகள் ஆரம்பமாகின. இப் பேரணியில் இளையவர்கள் பெண்கள், ஆண்கள் என சகலரும் தமிழர் தரப்பில் பெருமளவில் பங்கெடுத்தனர் இப் பேரணி நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இன்றைய பேரணியின் கோரிக்கைகளாக தமிழர்கள் ஒரு சிறுபான்மை குழு அல்ல என்றும், அவர்கள் ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை சர்வதேசம் உணர்ந்து கொள்ள வேண்டும்! சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் ஒடுக்குமுறை நிறுத்தப்படவேண்டும்! தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு ஓர் சர்வதேச நீதி விசாரணை நடாத்தப்படவேண்டும்! தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை அறிந்துகொள்ள ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடாத்த சர்வதேசம் ஆவன செய்யவேண்டும்!என்பவை முன்வைக்கப்பட்டு இப் பேரணி நடைபெற்றது.