2009 மே மாதம் தமிழின அழிப்பின் உச்சம் அரங்கேறிய காலம்.

சர்வதேசம் பார்த்தும் பாராமல் இருக்க தமிழின அழிப்பு நடந்தேறிய காலம்.

இந்நூற்றாண்டு காணாத இனப்படுகொலை நிகழ்ந்த காலம்.

மே. 18 உலகத்தமிழரின் ஆன்மாவே நடுங்கிப்போன நாள். கொத்துக் கொத்தாக எம்முறவுகள் பெண்கள், பிஞ்சுகள், முதியோர் என்ற பேதமின்றி சிங்கள ஆக்கிரமிப்பு வெறியர்களால் கொல்லப்பட்ட காலம்.
தமிழின அழிப்பு நாளின் 7ஆம் ஆண்டு நினைவுகள் ஒஸ்லோ தொடருந்து நிலையத்தில் இருந்து நோர்வே நாடாளுமன்றம் வரை கவனயீர்ப்பு பேரணியாக சென்று பாராளுமன்றம் முன்பாக நினைவுவணக்கம் இடம்பெற்றது