இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் பல இரகசிய திட்டங்களுடன் ஜெனீவா பயணமாகவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர், நேற்று ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்தின் சார்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.நா கூட்டத்தொடரின்போது முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து பகிரங்கமாக அறிவித்துவிட்டுச் சென்றதால், அவற்றை முறியடிக்க பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இம்முறை அவ்வாறு இடம்பெறுவதை தடுக்கும் நோக்கிலேயே தமது திட்டங்களை இரகசியமாக வைத்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.