சிங்கள இனஅழிப்பு அரசினால் சிறைக்காவலரர் வேலைக்கென  தெரிவுசெய்யப்பட்ட  தமிழ் மாணவர்கள்  சக சிங்கள மாணவர்களினாலும் சிங்கள அதிகாரிகளாலும் ஆடைகள் களையப்பட்டு  ஓட வழிகள் அடைக்கப்பட்டு அகோரத்தாக்குதரலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

“இது சிங்கள நாடு! இங்கே ஏன் வந்தனீங்கள்? வெலிக்கடையை மறந்துவிட்டீர்களளா” எனக்கேட்டும் கடினமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.  குட்டிமணி தங்கத்துரை உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடைசிறையில் 1983 இல் கொல்லப்படடமையே சிங்களவர் இலகுவில் மறந்து போகும் தமிழருக்கு நினைவுட்டீயுள்ளனர்.

2000 ம் ஆண்டு பிந்துநுவேவ சிறையிலும் 28 தமிழர் சந்திரிக்கா ஆட்சியன்போது படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

ஒற்றை ஆடசிக்குள் தீர்வைத்திணிக்க முயலும் இந்திய-மேற்கு நாடுகளும் “நல்லாட்சியை”  நம்பி துணைபோகும் தமிழ்த்தலமைகளும் தொடர்ந்து நடைபெறும் இனஅழிப்பு செயல்களை கண்டும் காணமலே இருந்துவருகின்றனர்.

Tamil prison guard trainees subjected to genocidal assault in Colombo, stripped naked