புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் June 20, 2016 News கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி அனைத்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். ஐ.நாவில் தற்போது 32ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பலத்த எதிர்பார்ப்பினை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில், மிகவும் அமைதியான போக்கு ஐ.நா சபையின் உள்ளகத்தில் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது. இவற்றுக்கு முழுமையான நீதி வெகு விரையில் கிடைக்கவேண்டும் எனவும், இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என்று முழக்கமிட்டவாறு ஐ.நா முன்றலில் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் அனைத்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.