ஊருக்கு சொல்லும் பல்லி உலைப்பானைக்குள் விழுந்தது
தமிழ் ஆட்சியையும் சிங்கள ஆட்சியையும்  சேர்த்து சிலேன் எனப்பெயரிட்டு காலனி த்துவ ஆட்சியில் ஈடுபட்ட பிரித்தானியாஇ தமிழரின் சுயாட்சிப்போராட்டத்திற்கும் “ஐக்கிய சிறிலங்கா” இற்குள் தீர்வு காண தமிழ்த் தரப்புக்களுக்கு
மீண்டும்இ மீண்டும் ஆலோசனை கூறிவந்தது.
ஸ்காட்லாண்ட் சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு நடந்தபோது முழு பிரித்தானியாவும் அதற்கு எதிராகப்பிரச்சாரம் செய்து பயப்பீதி காட்டி வாக்கெடுப்பு ஸ்காட்லாண்ட் தனிநாடாகப் போவதில்லை என முடிவாகியது.
ஆனால் இன்று ஐக்கிய இராச்சிய மக்கள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து போக வாக்களித்துள்ளனர்.
பொதுமக்களை கையாண்டு ஏமாற்றாமல்  அவர்களின் கருத்துகளிற்கு செவிமடிப்பதே ஆட்சியில் உள்ளவருக்கு சிறந்தது. தமிழீழமக்களின் கருத்துக்கள் ஆட்சியில் உள்ளவர்களைத்தாண்டி அந்தந்த நாட்டு மக்களை அடையவேண்டும். சாதரண பொதுமக்கள் தனியாக தமது தனித்துவத்தைப் பேணி  சுதந்திரமாகவே வாழவே வாக்களித்துள்ளனர். இதைத்தான் ஈழத்தமிழரும் விரும்புகின்றனர். தமிழீழத்தில் வாக்களிப்பு நடைபெறுமா?