25 26 சனி ஞாயிறு நாட்களில் மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது. இவ்விளையாட்டுவிழாவில் 600ற்கு மேற்ப்பட்ட போட்டியாளர்கள் பங்கெடுத்துள்ளனர்

மாவீரர் நினைவாக நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழாவானது நோர்வே வாழ் தமிழ் மக்களை ஒன்றிணைப்பதோடு எங்கள் எதிர்கால சந்ததிகளின் விளையாட்டு திறனை அதிகரிப்பதோடு எதிர்காலத்தில் நோர்வேயின் தேசிய விளையாட்டுகளிலும் சர்வதேச விளையாட்டுக்களிலும் விளையாடி தமிழர்களுக்கு பெருமைசேர்ப்பதற்கு களமாகவும் அமைகின்றது.

இந்த விளையாட்டுக்களை முன்னெடுப்பவர்கள் நடத்துபவர்கள் மக்களின் நலன் சார்ந்து சமூகத்தின் வளர்ச்சி சார்ந்து நெடுங்காலமாக அளப்பரிய பணிகளை செய்து வருகின்றார்கள் இதற்கு மக்களின் பூரண ஆதரவு ஒவ்வொரு ஆண்டும் கிடைத்து வருகின்றது. இதனால்தான் சிறப்பாக  நடைபெற்று வருகின்றது.

இதேபோன்று இம்முறையும் முழு ஆதரவுடன் இளையவர்களின் புதிய திட்டமிடலுடன் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மாவீரர் நினைவாக நடைபெற்ற தமிழர் விளையாட்டுவிழாவில் எட்டுக்கு மேற்ப்பட்ட விளையாட்டுக்கழகங்கள் பங்குகொண்டு விளையாட்டு விழாவை சிறப்பித்துள்ளனர் இதேவேளை இவ்வாண்டு சிறார்பிரிவிலும் பெரியோர் பிரிவிலும்  stovner தமிழ்  விளையாட்டுக்கழத்தினர் வெற்றிக்கிண்ணத்தை தட்டிச்சென்றுள்ளார்கள்.

13439083_1202707856414392_430146453636482737_n 13501943_1202707989747712_9116161379136450740_n 13510923_1069523753115454_1691988143898518660_n 13510955_1180715441973080_2633631488213842087_n 13516217_1200710556614122_3404524841117223192_n 13524521_1202707956414382_6914008136929959480_n 13528851_1069523816448781_193552672137945829_n 13529099_1069523789782117_8111773114569519308_n 13533328_1180715348639756_4106444123765639162_n 13537748_1202707826414395_7902013290888130358_n