nakr

1995ம் ஆண்டு செப்ரெம்பர் 22ம் திகதி நாகர்கோவில் மகா வித்தியாலய கட்டிடத்தின் மீது இலங்கை விமானப்படையின் புக்காரா விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் 21 மாணவர்கள் உடல் சிதறி பலியாகினர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். அந்த கோர நிகழ்வின் 21வது ஆண்டு நிறைவு இன்றாகும்.nkm_12

இந்தப் படுகொலையின் போது உயிரிழந்த மாணவர்களுக்கு இன்று நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வியமைச்சர் குருகுலராசா அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொள்கின்றார். மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்றைய அந்த நிகழ்வில் பலியான மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிள்ளைகளின் நினைவாக உருவப்படங்களுக்கு மாலை அணிந்து, தீபமேற்றி அஞ்சலி செலுத்தவுள்ளனர்.nakarkovil-menorial-380-seithy