சிரிக்கவைத்தவன்முன் சிரிப்பிழந்து நிற்கின்றோம்

சிரிக்கவைத்தவன்முன் சிரிப்பிழந்து நிற்கின்றோம்

ஈழத் தமிழினம் விடுதலை பெறவேண்டும் என்பதற்காக தன்னால் இயன்றவரை பணிசெய்து வந்த ஒரு தமிழின உணர்வாளனை, மற்றவரை மகிழ்விக்கும் நல்லமனிதனை, சிறந்த கலைஞனை, விளையாட்டுவீரனைத் தமிழினம் இழந்திருக்கின்றது.
1990 ஆம் ஆண்டுமுதல் 2016 ஆம் ஆண்டு மாவீரர்நாள்வரை இவரது தாயகப்பணி தளர்வின்றித் தொடர்ந்தது. நகைச்சுவை உணர்வும் நல்லமனமும் கொண்ட «நாட்டுப்பற்றாளர்» அமரர் செல்வராகவன் இன்று நம்மோடு இல்லை.

அமரர் செல்வராகவன் அவர்கள் தமிழினம் சார்ந்த எந்தப் பொதுப்பணி என்றாலும் அங்கே முன்நிற்பார். நோர்வேயில் அவர் வாழ்ந்த காலத்தில் இங்குள்ள தாயகம்சார்ந்து பணியாற்றும் அத்தனை அமைப்புக்களிலும் அவரது பங்களிப்பு ஏதோ ஒரு வடிவத்தில் இடம்பெற்றிருந்தது. அவருக்கென்று பிரத்தியேகமான பணி இல்லாவிடிலும் அந்த இடத்திலும் முன்நின்று, தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வால் ஏனைய பணியாளர்களை உற்சாகமூட்டுவார்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் மிகநீண்டகாலமாகப் பணியாற்றிவந்த அமரர் செல்வராகன் அவர்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிகளில் தொடர்ச்சியாகப் பங்கெடுத்து அவர்களையும் உற்சாகப்படுத்துவார். அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் வளர்ச்சியில அவர்களோடு கைகோர்த்துக்கொள்வார். ஆட்டக்குதிரை ஆடியாடி அனைவரையும் மகிழ்வித்த விதம் அற்புதம். தையிலே தொடங்கி மார்கழியில் முடிவடையும் பண்டிகைகளில் தமிழர்திருநாள், நத்தார் பெருநாட்களிலெல்லாம் குழந்தைகள்முதல் பெரியவர்வரை உன் ஆட்டம்கண்டு அகமகிழ்ந்து போவார்கள். இம்முறையும் நத்தார் வந்தது நீ வரவில்லை நாமெல்லோரும் ஆடிப்போனோம் ஐயா. மகளிர் அமைப்பென்றால் அவர்களது நிகழ்வுகளிலும் தன்பங்கைச்செலுத்துவார். தமிழ்முரசம் வானொலியின் தீவிரமான நேயர், ஆரம்பகாலத்தில் தனது நகைச்சுவையினூடாக அரசியல்கருத்துக்களைத் தமிழ்முரசத்தினூடாகப் பரப்புரை செய்த கலைஞன்.

இவ்வாறு பன்முக ஆற்றல்கொண்டு பலராலும் விரும்பப்பெற்ற நல்லமனிதனை நாம் இழந்துநிற்கின்றோம். அன்னாரின் மீளாத்துயிலால் ஆறாத்துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவிப்பதோடு, ஆறாத்துயரை நாமும் பகிர்ந்து ஆற்றுப்படுத்திக்கொள்கின்றோம்.

துயர் பகிர்ந்துகொள்ளும் அமைப்புக்கள்

tcc

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

tro
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
annailogo
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்
trvs_logo
தமிழர் வள ஆலோசனை மையம்
tko
தமிழ் மகளிர் அமைப்பு
murasam_logo
தமிழ்முரசம்
tech_norge
பொருண்மிய மதியுரையகம்
logo_stor
நோர்வே ஈழத்தமிழர் அவை

இறுதி வணக்க நிகழ்வு
Alfaset Gravlund 28.12.2016 புதன் கிழமை 12:00 – 14:00
* கிரியை
* «நாட்டுப்பற்றாளர்» மதிப்பளிப்பு
* மலர்வணக்கம்
* நினைவுரை
* இறுதி ஊர்வலம்

துயர் பகிரும் – நினைவு மீட்கும் ஒன்று கூடல்
Solheim veien 72, 1473 Lørenskog 28.12.2016 புதன் கிழமை 14:30.