0Y6vG0HwJkYநோர்வேயில் நடைபெற்ற மே எழுச்சிநாள். May 1, 2017 TCC ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் நாளாக இன, மத, மொழி, நாடு என்ற வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் நாளாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் நோர்வேயில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினரால் முன்னெடுக்கப்பட்ட மே எழுச்சிநாள் பேரணியில் சர்வதேச தொழிலாளர் நாள் நிகழ்வை நோர்வேயில் வாழும் பல்லின மக்களுடன் இணைந்து இன்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர். தாயகத்தில் அடக்குமுறைக்குள் அகப்பட்டு தவிக்கும் உறவுகளின் விடுதலைக்காகவும் சிறிலங்கா பேரினவாத அரசால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகா நியாயம் வேண்டியும்; மக்கள் பதாகைகளை கரங்களில் ஏந்தி தேசியத்தலைவனின் நிழற்படத்தையும் தமிழ்த்தேசியத்தின் கொடியையும் தாங்கி தமிழ் இனத்தின் விடுதலைக்காக குரல் எழுப்பினர் சுமார் இரண்டு கிலோமீற்றர் வரை ஒஸ்லோவின் மையப்பகுதியை ஊடறுத்து சென்ற இந்த மே எழுச்சிநாள் பேரணியில் பாதையின் இருபக்கமும் நின்ற பல்லினமக்கள் கரவொலி எழுப்பி தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்