இரத்தவெறி பிடித்த அரச பயங்கரவாதம் தன் கோரப்பற்களால் எம் குஞ்சுகளைக் குதறி எறிந்த நாட்கள்…
பூவாய், பிஞ்சாய், காயாய், கனியாய் கொத்துக் கொத்தாய் எம் உறவுகளைக் கொட்டிக்கொடுத்த நாட்கள்…
நாளுக்கு நாள் மணிக்கு மணி நிமிடத்திற்கு நிமிடம் நொடிக்கு நொடி தமிழினமே அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த நாட்கள்…
பசிக்கு உணவில்லை, பச்சிளம் குழந்தைகளுக்கு பாலில்லை, இருக்க இடமில்லை, வலிக்கு மருந்தில்லை, வீழ்ந்தவர்கள் ஒருபுறம் விழுப்புண்பட்டவர்கள் ஒருபுறமாய்; எம் உறவுகள் கண்முன்னே துடிதுடித்து எமை விட்டுப் பிரிந்த நாட்கள்.

tamil_post_02