தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இயங்கு சக்தியாக இருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்களும் அதன் துணை அமைப்புக்களும் தமிழ் இனத்தின் விடுதலைக்காக விதையாக வீழ்ந்தவரின் கனவுகளுக்காக குனியாது வளையாது நெளியாது நேரிய சிந்தனையில் செயல்ப்படுதலானது தமிழ் இனத்தின் விடுதலைக் குரலை நசுக்க நினைக்கும் சக்திகளுக்கு பெரும் தலையிடியாக இருந்து வருகின்றது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை

இதன் அடிப்படையிலேயே மக்களின் தேசிய அமைப்புக்கள் மீதான நம்பிக்கையை சிதறடிப்பதற்கான ஆதாரமற்ற செய்திகளை பரப்பி தேசியம் எனும் போர்வையில் 2009 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு சிறீலங்காவால் உருவாக்கப்பட்ட அதன் உதிரிகளால் தமிழ்மக்கள் மீது கரிசனை வெளிப்படுத்துவதுபோன்ற செயற்பாடுகளுக்கு ஊடாக தேசிய விடுதலைக்கான குரலை நசுக்குவதற்கு முகநூல்வழியாகவும் புதிய புதிய மனிதநேய அமைப்புகள் என்ற போர்வையிலும் களம் இறக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகள் 2009 இற்கு பிற்பாடு பல முனைகளில் முன்னெடுக்கப்படுகின்றது

அதேநேரத்தில் தமிழ்த் தேசிய செயற்பாட்டு இயக்கங்களில் உள்ளவர்கள் சிலரும் இப்படியானவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு பிரித்தெடுத்து விடுதலைக்கான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்துவதற்கான சதிவலைகளும் பின்னப்பட்டு வருகின்றது.

மிகவும் ஒரு சவாலான காலகட்டத்தில் தேசிய செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியுள்ள சூழ்நிiயில் மக்களின் தணிந்து போகாத விடுதலை உணர்வே இன்றும் உந்து சக்தியாக இருக்கின்றது.

ஆகவே மக்களை குழம்பிய குட்டையில் தள்ளிவிட்டு கூத்து பார்ப்பதற்கான வேலைகளில் சிறீலங்காவால் உருவாக்கப்பட்ட அடிவருடிகளின் செயற்பாடுகள் தொடர்கின்றது.

ஆனாலும் காலம் காலமாக மாவீரர்களின் கனவுக்காகவும் தமிழர்களின் விடிவுக்காகவும் உறுதியோடு தம்மை அர்ப்பணித்து பணிபுரியும் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளை சிதைக்க முடியாது என்பது வரலாறு

2009 இற்கு பிற்பாடு வீழ்த்துவதற்கு வகுக்கப்பட்ட சூட்சுமத்தை உடைத்தெறிந்த தேசிய செயற்பாட்டிற்கான ஆன்ம உறுதி இனிவரும் காலங்களிலும் உடைத்தெறிந்து மக்களின் விடுதலைக்காக பயணிக்கும் என்பது உறுதி.