1983 – யூலை மறக்க முடியுமா?

சிங்களத்தின் தமிழின அழிப்பின் படிமுறைகளில் ஒன்றானதே கறுப்பு யூலை 1983.

JuluRiots_1
இந்த «கறுப்பு யூலை» மாதம் எம்மவர்களாலும் இனக்கலவரம் என்றே கூறப்பட்டுவந்தது வருகின்றது. இனக்கலவரம் எனில் இரு இனங்கள் இனத்துவேச காரணங்களினால் வன்முறையால் ஒருவலை ஒருவர் தாக்கிகொள்வது.

ஆனால் 1983 யூலையில் இலங்கைத்தீவில் நடந்தது ஒரு இன அழிப்பின் படிமுறை. இங்கு இரு இனங்கள் மோதிக்கொள்ளவில்லை. சிங்கள அரசு தனது குண்டர்களை காவல்துறையின் ஆதரவுடன் தமிழ் மக்கள் மீது படுகொலைபுரிந்தது. அன்றய தமிழ் அரசியல் தலைவர்கள் என அழைக்கப்பட்டவர்களும் சிங்களத்தின் பதமான «இனக்கலவரம் – ஊழஅஅரயெட சழைவள » என்ற பதத்ததையே பாவித்தனர். இனக்கலவரம் என்றால் எம்மவர் மனத்தில் சிங்களவர் தமிழர்களை படுகொலை செய்ததே மனதில் தோன்றும். ஆனால் பொதுவானவர்களுக்கு வேறு அர்த்தத்தையே கொடுக்கும்.

1983 யூலை படுகொலையின் ஆரம்ப நாளில் சிறிலங்காவின் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தனது சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில செய்தி ஒலிபரப்பின் போது மீண்டும் மீண்டும் ஒரு வசனத்தை ஒலிபரப்பியது.
«இது வரை தமிழர்கள் 9 பேரும் சிங்களவர் 13 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்» என.
அர்த்தம் புரிகின்றதா ? ஆதாவது ஏன் இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் சிங்களவரே என்ற தொனியில் ஜே.ஆர் ஜெயவர்தனா ஒலிபரப்பினான்.
அன்று 22 «சிறிலங்கன்» கொல்லப்பட்டனர் என அறிவிக்கவில்லை. இதுதான் சிங்களம். சிங்களத்தை நன்கு புரிந்த எவருக்கும் இது புதுவிடயமில்லை.
«நல்லிணக்கம்» எனக்கூறி சிங்களத்துடன் கை கொடுக்கும் மானங்கெட்ட கூட்டங்களுக்கும் இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
அன்று வாக்காளர் மற்றும் மின்சாரம் செலவு கட்டும் பெயர்பட்டியலுடன் சென்று தமிழர்கள் கொல்லப்பட்டனர், சொத்துக்கள் சூறையாடப்படட்டு தீயிட்டு கொழுத்தப்பட்டன.
1983 இல் மட்டும் இவ்வாறு நடைபெறவில்லை. ஆனால் 1983 இல் சிங்களத்தினால் திட்டமடப்பட்டு மிகப்பாரிய அளவில் தமிழின அழிப்பின் ஆரம்ப படிமுறை நடந்தேறியது.

எமக்கு நடந்ததை நாமே மறந்தால் வேறு எவர் நினைவு கூறுவர்?
1983 யூலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழரை நினைவு கூறுவோம் வாரீர்.
காலம்: 24.07.2017 திங்கள் மாலை 18:00 மணி
இடம்: ஒஸ்லோ தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம்.

 

JuluRiots_9 JuluRiots_10
JuluRiots_8 JuluRiots_3
JuluRiots_6 JuluRiots_5
JuluRiots_7 JuluRiots_4
JuluRiots_2 JuluRiots_11