செஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல்

திகதி: 14.08.2017, திங்கட்கிழமை
இடம்: தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் Ammerud

வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா  கொடுங்கோல் அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். 155 ற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்தனர்.

தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவிட்ட சம்பவம் இது.

பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் தான் இவ் உயிர்களை காவு கொண்டன. உலக வரலாற்றில் நடந்த மறக்கமுடியாத பேரவலமாக தமிழன் வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது எம் இனிய பள்ளி குழந்தைகளின் பேரிழப்பு – அன்று ஆட்சியில் இருந்தவர்கள் இந்த கொலை பற்றி வாய்மூடி மெளனிகளாகவே இருந்தனர். இன்றுவரை அந்த பாரிய படுகொலை பற்றி எந்தவித விசாரணைகளோ அல்லது பொப்புக்கூறல்களோ இடம்பெறவில்லை.

இவ் நினைவேந்தலில் பங்குகொள்ள அனைவரையும் வேண்டுகிறோம்.

திகதி: 14.08.2017, திங்கட்கிழமை
இடம்: தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் Ammerud
ஒழுங்கமைப்பு: தமிழர் ஒருங்கிணைப்பு குழு

senj-5