30.august – International Day of the Victims of Enforced Disappearances

ஆகஸ்ட் 30ம் திகதி –  சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான கவனஈர்புப்போராட்டமும் நினைவுகூரலும்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தினம் ஒஸ்லோவில் ஓர் கவனஈர்புப்போராட்டம் மூலமாக, வருகின்ற புதன்கிழமை நினைவுகூரப்படவுள்ளது.

தாயகத்தில் எமது உறவுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு பல தொடர் போராட்டங்களில் ஈடுபட் டு வருவது பலரும் அறிந்ததே. சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க இப்போராட்டமானது புலம்பெயர் தேசங்களிலும் வருகிற 30ம் திகதி புதன்கிழமை, சர்வதேச  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தினத்தில் நினைவுகூரப்படுகிறது.

கடத்தப்பட்டும், கைதுசெய்யப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஒருபுறம் இருக்க, யுத்தத்தின் இறுதி நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் உத்தரவுக்கு அமைய சரணடைந்த, மற்றும் இராணுவத்திடம் உயிருடன் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் உட்பட ஏராளமானோர் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள எமது உறவுகளிற்காக சர்வதேசத்திடம் நீதி கேட்பது எமது கடமையாகின்றது.

இப்போராட்டத்தில் அனைத்து ஒஸ்லோவாழ் உறவுகளையும் கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம்.

காலம்: 30.08.2017 புதன்கிழமை
நேரம்: மாலை 17:00 மணி
இடம்: Egertorget (Stortinget T-bane நிலையத்திற்கு) அருகாமையில்

ஒழுங்கமைப்பு
தமிழர்  ஒருங்கிணைப்புக்குழு / மக்கள் அவை

a37

a32