2ம் லெப் மாலதியின் 30 வது வருட நினைவுதினம் இன்று October 10, 2017 News, TCC இந்திய வல்லரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி 10.10.1987 அன்று கோப்பாய் வெளியில் விடுதலைக்காய் காற்றில் கலந்த 2ம் லெப் மாலதியின் 30 வது வருடம்நினைவுதினம் இன்று. 1987 ஐப்பசி 10ம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2ம் லெப். மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.