ஐநா நோக்கிய நீதிக்கான பயணம் – நாள் 6 March 6, 2018 News, Uncategorized ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் 6 வது நாளாக இன்று காலை சார்புருக்கன் மாநகர முதல்வரின் நிர்வாக உறுப்பினர் திரு Thomas Brück அவர்களிடம் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் மனுவை கையளித்தனர். திரு Thomas Brück அவர்கள் மனிதநேய ஈருருளிப் பயணத்தை முன்னெடுத்தவர்களை வரவேற்றத்துடன் அவர்களின் தொடர்பயணம் வெற்றியளிக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இன்றைய ஈருருளிப் பயணத்தில் கடும் குளிரிலும் மேலதிகமாக மகளிர் ஒருவரும் இணைத்துக்கொண்டு தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. சந்திப்பை தொடர்ந்து ஈருருளிப் பயணம் பிரான்ஸ் நாட்டை நோக்கி சென்றது.