தேசிய மாவீரர்நாள் ஒழுங்குகள் 2018 சம்பந்தமாக  தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுக்கும் அறிவித்தல்! 

மாவீரர்நாள் 2018 ஒழுங்குகளும் முதலாவது பொதுக்கூட்டமும்

எங்கள் தேசப்புதல்வர்களை நினைவுகொள்ளும் தேசிய மாவீரர் நாள் 2018 சிறப்பாக நடைபெற,  அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்படும் தேசிய மாவீரர் நாள் வேலைத்திட்டம் தொடர்பான முதலாவது பொதுக்கூட்டம்,  வருகின்ற வியாழக்கிழமை  01.11.2018 மாலை 19:30 மணிக்கு தமிழர் வள ஆலோசனை மையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இக் கூட்டமானது மாவீரர்நாளை சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான  கூட்டமாக அமையும்.

இப் பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வருகைதருவதுடன் மாவீரர் வேலைத்திட்டங்களில் தாங்களும் பங்குபற்றி,

இவ் வருட தேசிய மாவீரர்நாளை சிறப்பாக நடாத்த உதவிசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்

“தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்!”

ஒழுங்குகள்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Maveerar Naal 2018
MV pics 2018-3