04.03.19 – ஜெனிவா பேரணி – ஐ.நா முன்றலில் அலையென எழுவோம்! February 22, 2019 News, TCC 04.03.19 – ஜெனிவா பேரணி – ஐ.நா முன்றலில் அலையென எழுவோம்! எமது உரிமையை உலகறியச் செய்யும் வகையில் வருகின்ற மார்ச் மாதம் 04ம் திகதி (04.03.19), நோர்வே வாழ் தமிழீழ மக்களாகிய நாம், ஐ.நா முன்றல் முருகதாசன் திடலில், அனைத்துலகரீதியில் வருகைதரும் தமிழ் உறவுகளுடன் இணைந்து உரிமைக்காக குரல் கொடுப்போம் வாருங்கள்! விடுதலைக்கான பாதையென்பது வீழ்ச்சிகளால் விலகுவதோ அல்லது பின்னடைவுகளால் பின்வாங்கி விடுவதோ அல்ல. மாறாக, தடைகளைத் வென்று விடாமுயற்சியுடன் எழுவது! நாம் இன்றைய நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு ஐ.நா நோக்கி ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் அலையென எழுவோம்! வாருங்கள்! ஜெனிவா பேரணி காலம்: 04.03.2019 திங்கட்கிழமை நேரம்: 14.00 மணி தொடக்கம் 18.00 மணி வரை இடம்: ஐ.நா முன்றல், முருகதாசன் திடல் உங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களையும் இக் கவனயீர்ப்பில் கலந்து கொள்ள அழைத்து வாருங்கள்! தமிழ் இனஅழிப்பிற்குகு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் தமிழ் இனஅழிப்பிற்குகு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் 18.02.2019 பி.ப 15:00 மணியளவில் European Commission Belgium முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இவ் மனிதநேய ஈருருளிப் பயணம் ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐ.நா நோக்கி தனது பயணத்தை தொடர்கிறது தொடர்புகளிற்கு: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, நோர்வே ‘தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்’