மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2019

மாவீரர் நினைவாக நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழா இம் முறையும் 500 இற்கும் அதிகமான போட்டியாளர்களுடன் சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்விளையாட்டு விழாவில் அனைவரையும் வந்து கலந்து கொள்ளும்படி வேண்டுவதுடன்,

உங்களாலான ஆதரவையும் உதவிகளையும் இவ்விரண்டு நாட்களிலும் வழங்கி,

இவ்விளையாட்டு விழாவை சிறப்பிக்கவும் வேண்டுகிறோம்.

சிறப்பு நிகழ்ச்சிகளாக முட்டி அடித்தல், குழை எடுத்தல் மற்றும் வெளியரங்க கலைநிகழ்வுகளும் இந்த வருடம் இடம்பெறும்.

இவ் விளையாட்டு விழா Leiraveien 2, 2000 Lillestrøm முகவரியில் அமைந்துள்ள Romerike Friidrettsstadion இல் சனி ஞாயிறு இரண்டு நாட்களும்  (22 -23.06.2019) காலை 09:00 மணிமுதல் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

பிரதமவிருந்தினராக  திரு. ஆதித்தன் ஜெயபாலன் (Phd student UIOகலந்து சிறப்பிக்கின்றார்.

ஆதித்தன் ஜெயபாலன் 2010 ஆம் ஆண்டிலிருந்து தமிழீழ விடுதலை அரசியலில் தம்மை ஆழமாக ஈடுபடுத்திக்கொண்டவர். இவர் அரசியல் ஆய்வாளராகவும், அரசியல் கட்டுரைகள் எழுதுபவராகவும், ஈழவிடுதலைப் போராட்டத்தின் நியாயத்ததை புலம்பெயர் தேசங்களில் எடுத்துரைப்பவராகவும் இருந்து வருகிறார். இவர் அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்று Notam சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது தனது Phd. படிப்பை ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் கற்று வருகிறார்.

ஒழுங்கமைப்பு
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
Juni 2019

Sports Notice 2019 v3