தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலும், சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வும்

தமிழீழ விடுதலைக்காக யாழ். நல்லூரில் உண்ணாநோன்பிருந்து, அகிம்சை வழியில் போராடி, தனது உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவுதினமும், சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வும் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு Rommen Scene மண்டபத்தில் நடைபெறும்

திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்தீபன், தமிழீழத் தாயக மண்ணிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட, 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 நாள்கள் தொடர்ச்சியாக நல்லூரில் உண்ணாவிரதம் இருந்து, தமிழீழ விடுதலைக்காக தனது உயிரை ஆகுதியாக்கிக் கொண்டார்

ஒஸ்லோ வாழ் அனைத்து மக்களையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்

காலம்: 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி
இடம்: Rommen Scene, Karen Platous Vei 31, 0988 Oslo

ஒழுங்கமைப்பு: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

 

 

Image-1 (1)