தமிழீழத் தேசிய மாவீரர்நாள் ஒழுங்குகள் 2019 
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுக்கும் அறிவித்தல்!

அறிவித்தல்-1

மாவீரர்நாள் 2019 ஒழுங்குகளும் இரண்டாவது பொதுக்கூட்டமும்

எங்கள் தேசப்புதல்வர்களை நினைவுகொள்ளும் தேசிய மாவீரர் நாள் 2019 சிறப்பாக நடைபெற, அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்படும் தேசிய மாவீரர் நாள் வேலைத்திட்டம் தொடர்பான இரண்டாவது பொதுக்கூட்டம், வருகின்ற வெள்ளிக்கிழமை 15.11.2019 மாலை 19:00 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் நடைபெறும்.

இக் கூட்டமானது மாவீரர்நாளை சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டமாக அமையும்.
இப் பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வருகைதருவதுடன் மாவீரர் வேலைத்திட்டங்களில் தாங்களும் பங்குபற்றி, இவ் வருட தேசிய மாவீரர்நாளை சிறப்பாக நடாத்த உதவிசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

Info til folk 2019 final (1)
அறிவித்தல்-2

தமிழீழ தேசிய மாவீரர்நாள் தொடர்பாக இளையோருடனான சந்திப்பு 14.11.19
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுக்கும் அறிவித்தல்

அனைவரிற்கும் வணக்கம்!  இது இளையோருக்கான அழைப்பு !

வருகிற வியாழக்கிழமை 14.11.2019, மதியம் 17:30 மணியளவில் இளையோருக்கான  சந்திப்பொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இச் சந்திப்பானது இந்த வருட மாவீரர்நாள் வேலைத்திட்டங்களில் இளையோர் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழவின் செயற்திட்டத்திற்கு எதிர்காலத்தில் இளையோரின் ஒத்துழைப்பு தொடர்பாகவும் அமையும்.

மாவீரர் வேலைத்திட்டங்களிலும் மற்றும் தமிழர் ஒழுங்கிணைப்புக் குழவிற்கு ஒத்தாசையாக இருந்து உதவி செய்ய விரும்பும் அனைத்து இளையோரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இடம்: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம், Ammerud
காலம்: 14.11.2019 வியாழன் மாலை 17:30 மணி

ஒழுங்குகள்:

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Møte med ungdommer 2019-fin-2