ஆழிப்பேரலை –  அழியா நினைவுகளின் அகவைகள் பதினைந்து
– 26 டிசம்பர் 2004: கடற்கோள் எம் மக்களை காவுகொண்ட நாள்

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி (26.12.2004) ஆழிப்பேரலை தனது கொடூர அரக்கத்தனத்தால் இந்தோனேசியா, இந்தியா மற்றும் இலங்கை கரையோரங்களை கண் இமைக்கும் நேரத்தில் அழித்து மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மனித உயிர்களைப் பலியெடுத்து சின்னா பின்னமாக்கிய நாள்!

கடற்கோள் எனப்படும் ஆழிப்பேரலையை எம்மிலே யார்தான் மற4க்க முடியும்?
ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் 15 ஆண்டுகள்  ஆகிவிட்ட போதிலும், அதனால் ஏற்பட்ட ரணங்கள் இதுவரை மக்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை.

இந் நாளை ஒன்றுகூடி நினைவுகூருவோம்!

இடம்: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம், Ammerud
காலம்: வெள்ளிக்கிழமை, 27.12.2019, மாலை 19:00 மணி
ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

aali2019