தளபதி கேணல் கிட்டு உட்பட 10  மாவீரர்களின் நினைவுநாள்!!

வங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து  26 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன.

ஆனால், தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்து கொண்டேயிருக்கின்றன. கேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று.

கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர் அதனால்தான தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமை களைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்த்த நேயம் அது” என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார்.

கேணல் கிட்டு அவர்களின் நினைவுவணக்க நிகழ்வு, வருகிற வியாழக்கிழமை 16.01.2020, மாலை 18:30 மணிக்கு தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடைபெறும்.

இடம்:  தமிழர் வள ஆலோசனை மையம் (TRVS),  Nedre Rommen 3
காலம்: 16.01.2020 வியாழக்கிழமை
நேரம்: மாலை 18:30 மணி

ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Kiddu