சிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020 February 4, 2020 News, TCC 04.02.2020 சிறிலங்காவின் சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் சிறீலங்காவிற்கு 72 ஆவது ஆண்டு சுதந்திர நாள். தமிழர்களுக்கு 72 ஆண்டுகால அடக்குமுறை வாழ்வின் குறியீட்டு நாளாகும். நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (04.02.2020) மாலை ஆறு மணி தொடக்கம் ஏழு மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவிருக்கின்றது. சிறீலங்காவின் 72 வது சுதந்திர தினத்தை புறக்கணிப்போம் தமிழினத்தின் மீது மேற்கொண்ட இன அழிப்பு போர்க்குற்றங்கள், தொடரும் சித்திரவதைகள் என்பவற்றிற்கு எதிராக குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தக் கோருவோம். அனைவரும் ஒன்றிணைந்து நீதி கேட்டு போராடுவோம் வாருங்கள் ! TCC og NCET