மே 18

இனவெறி பிடித்த சிங்கள அரச பயங்கரவாதம் தன் கோரப்பற்களால் எம் மக்களை குதறி எறிந்த நாட்கள்…

பூவாய், பிஞ்சாய், காயாய், கனியாய், கொத்துக் கொத்தாய் எம் உறவுகளைக் கொட்டிக்கொடுத்த நாட்கள்…

நாளுக்கு நாள், மணிக்கு மணி, நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி தமிழினமே அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த நாட்கள்…

பசிக்கு உணவில்லை, பச்சிளம் குழந்தைகளுக்கு பாலில்லை, இருக்க இடமில்லை, வலிக்கு மருந்தில்லை, வீழ்ந்தவர்கள் ஒருபுறம் விழுப்புண்பட்டவர்கள் ஒருபுறமாய் எம் உறவுகள் கண்முன்னே துடிதுடித்து எமை விட்டுப் பிரிந்த நாட்கள்.
தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு

மே 18: 
இந்தநாள் ஈழத்தமிழினத்தின் இருப்பை அழிக்க நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு நாள்

தற்போதைய நோய் தொற்றுக்காலத்தில், சூழ்நிலைக்கு அமைவாக இந்த இன அழிப்பு நாள் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பாக இணையவழி, மற்றும்  Zoom, Facebook ஊடாகவும்  இடம்பெறும். எல்லோரும் இணையவழியூடாக இவ் நினைவேந்தலில்  ஒன்றிணைய அழைக்கிறோம்!!!

எல்லோரும் 18:00 மணியளவில்  கீழே தரப்பட்ட இணைப்பை அழுத்தி நேரடி ஒளிபரப்பில் இணைந்து கொள்ளுங்கள்

காலம்: 18.05.2020 மாலை 18:00 -20:00 மணி
முகநூல் முகவரி  https://www.facebook.com/tamilmurasam/
Zoom  இணைப்பு :- https://aho.zoom.us/j/63805072326

ஒழுங்குகள்: நோர்வே ஈழத்தமிழர் மக்களவை

IMG_8219