கரும்புலிகள் நாள் யூலை 5 June 22, 2020 News, TCC மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள், யூலை 5. கரும்புலிகளின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன், உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது. தமிழீழ விடுதலை வேண்டி விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் கரும்புலிகள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் விரவரலாறு உள்ளது. கரும்புலிகள் நாள் வணக்கநிகழ்வு த.ஒ.கு அலுவலகத்தில் நடைபெறும் காலம்: யூலை 5, ஞாயிறு மாலை 18:00 மணி ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு