மாவீரர்நாள் 2020 ஒழுங்குகள்

எங்கள் தேசப்புதல்வர்களை நினைவுகொள்ளும் தேசிய மாவீரர் நாள் 2020 இந்த வருடம் Rommen Sletta, Haavard Martinsens vei 35 இல் அமைந்துள்ள வெளிமைதானத்தில் நடைபெறும்.

மாவீரர்நாள் நிகழ்வுகள்  தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் இந்த நெருக்கடியான தொற்று சூழ்நிலையிலும் politi, bydelsoverlege மற்றும் Klubb leder ஆகியோரின் அனுமதியுடன் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இந்த வருட மாவீரர்நாள் நிகழ்வுகள் தற்போதைய தொற்று விதிகளுக்கமைய 200 பேருடன்தான் வெளிமைதானத்தில் நடைபெறும். வரும் மக்களும் பகுதி பகுதியாக வந்து வணக்கம் செலுத்தக்கூடிய வகையில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இந்த வருட தேசிய மாவீரர் நாள் ஒழுங்குகளை மேற்கொண்டு வருகிறது.

எல்லா மக்களும் எங்களுக்கு உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அறிவுறுத்தலிற்கமைய நடக்குமாறு வேண்டிநிற்கிறோம்.

இந்த வருட மாவீரர் நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் அறிவுறுத்தல்கள் தமிழ்முரசம் வானொலியிலும் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் Viber குழுமத்திலும் தொடர்ச்சியாக அறியத்தரப்படும்.

“தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்!”


ஒழுங்குகள்

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Maaveerar_20_TCC_Plakat_v2a