தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

பரந்து வாழும் உலகத்தில் தமிழ்மக்கள் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ்மக்களின் சுதந்திரபோராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியவர்  தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.

தாயகத்தில் போர் உக்கிரம்பெற்ற காலகட்டப்பகுதிகளில் தாயத்தில் இருந்து கொண்டு அரசியல் செயற்பாடுகளை நகர்த்த முடியாத சூழலிலும் உடல்நலத்தினை கருத்தில் கொள்ளாது பன்னாட்டிற்கு சென்று  தமிழ்மக்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்துகூறியவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.

இவரது பெரும் போராட்டப்பணிக்காக “தேசத்தின் குரல்” என தேசியத்தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டார்

தேசத்தின் குரல் திரு.அன்ரன் பாலசிங்கம்  அவர்களின்  14ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, வருகிற திங்கள் 14.12.2020, மாலை 19:00 மணிக்கு த. ஒ. அ லுவலகத்தில் தற்போதைய கொரோனா தொற்றுச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இடம்பெறும்.
நிகழ்வு இணையவழியூடாக ஒளிபரப்பப்படும்.

ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Artboard 1-100